வைத்தியசாலையில் புகுந்த போலி வைத்தியர்!

வைத்தியசாலையில் புகுந்த போலி வைத்தியர்!

நிட்டம்புவ - வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பெண்கள் வார்டிற்கு வைத்தியர் போன்று வேடமிட்டு நுழைந்த ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஸ்டதஸ்கோப், போலி ரப்பல் முத்திரை, சிலின்ஜர், சேலைன் குழாய் ஒன்று, ஈ.சீ.ஜி ரோல் 5, மடிக்கணிணி ஒன்று, தொலைபேசி ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஹாரி, தர்கா மாவத்தையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (26) அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post