
நேற்று (26) இனங்காணப்பட்ட 12 கொரோனா தொற்றாளர்களில் இவரும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கைதி வெலிகடை சிறைச்சாலையிலிருந்து புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு இருந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வருவற்கு முன்னார் அவர் காலி சிறைச்சாலையிலிருந்ததாகவும், தற்போது காலி சிறைச்சாலையிலிருக்கும் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 200 நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.