நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகுவது உறுதி!

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகுவது உறுதி!

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார்.

‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை விடவும் அதிசிறப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் இடமபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் தான் 2010 ஆம் ஆண்டே நாமல் ராஜபக்ஷவின் திறமைகளைக் கண்ணாரக் கண்டதாகவும், அவர் தூரநோக்குடைய ஒரு அரசியல்வாதி என்றும் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post