அறிகுறிகள் இன்றியும் கொரோனா தொற்று! மக்களுக்கான விசேட அறிவுரைகள்!

அறிகுறிகள் இன்றியும் கொரோனா தொற்று! மக்களுக்கான விசேட அறிவுரைகள்!

குறைந்த அறிகுறிகள் உள்ள நிலையிலும் அல்லது அறிகுறிகளே இல்லாத போதும் கூட ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகக்கவசங்களை அணிவதை முறையாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றானது, ஏற்கனவே தொற்றுக்கு இலக்கானவர்களிடமிருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக் கொள்ள முடியும் என இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர குறிப்பிடுகையில்,
$ads={1}
குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்.

எனவே முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு தொற்று பரவுவதை குறைத்துக் கொள்ள முடியும்.
$ads={1}
இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேண வேண்டும். அதேபோல் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் சளியை வௌியேற்றுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெவ்வேறு நோய் நிலைமைகளினால் அவதியுறும் நோயாளர்களும் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் உயிர் ஆபத்துகளை தவிர்த்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post