இம்முறை இரு வேறு கட்சிகளில் போட்டியிடும் ஒரே வேட்பாளர்!

இம்முறை இரு வேறு கட்சிகளில் போட்டியிடும் ஒரே வேட்பாளர்!

ஒரே வேட்பாளர் இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் இரு வேறு கட்சிகளில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்தேர்தல்கள் ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று (15) தபால் திணைக்களத்தினால் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டுடன் வழங்கப்பட்ட ஆவணத்தில் இதுகுறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வாக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
$ads={1}
அதன்படி, கொலொன்னே சிரி சாந்த விஜய தேரர் இலக்கம் 03இல் ஐக்கிய மக்கள் சக்தியினையும், இலங்க்கம் 02 இல் ஜனசெதபெரமுனையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நபர் என்று வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரே நபர் இரண்டு கட்சிகளிலிருந்து போட்டியிட முடியுமா என்று வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், மேலும் வேட்பு மனுக்கள் ஏன்நிராகரிக்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post