அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் அட்டை அச்சிடப்பட்டு கையளிப்பு!

அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் அட்டை அச்சிடப்பட்டு கையளிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பான அனைத்து மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று (04) கையளித்து முடித்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்க உள்ளது.

அதேவேளை உத்தியோகபூர்வ தேர்தல் விளம்பர பிரசுரங்களை எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் விநியோகித்து முடிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post