
119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்டபகுதிக்கு விரைந்தனர்.
சிசுவின் தாயிடம் மேற்கொண்ட விசாரனைகளை அடுத்து சிசு புதைக்கப்பட்ட பகுதியினை குறித்த பெண் அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது.
புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தினை ஹட்டன் தலைமை நீதவான் முன்னிலையில் மீட்டெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதை அடுத்து 15 நாட்களுக்கு முன்னர் இந்த சடலம் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த குழந்தையை பிரசவித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிற்கு ஏற்கனவே 20 வயதுடைய குழந்தை ஆண் குழந்தை ஒன்றும் 16 வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

