இதுவரை இனம்காணப்பட்ட நோயாளிகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்!!

இதுவரை இனம்காணப்பட்ட நோயாளிகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்!!

கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் கந்தகாடு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணியாற்றிய நபரின் மனைவி மற்றும் மாமனாரும் கொவிட் 19 தொற்று நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது, இன்று (14) மாலை 5 மணி அளவில் நிலவிய கோவிட் நிலைமை தொடர்பான சுகாதார சேவைகள பணிப்பாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது,

இன்றைய தினம் வெளிநாட்டிலிருந்து வந்த அதாவது ஓமானிலிருந்து வருகை தந்த மூவர் கோவிட் தொற்று நோயாளிகளாக அடையாளம் காணப்படடுள்ளனர். இதற்கு மேலதிகமாக கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் கந்தகாடு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணியாற்றிய நபரின் மனைவி மற்றும் மாமனார் ஒருவரும் கோவிட்19 தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதே போன்று லங்காபுரவில் அடையாளம் காணப்பட்ட நோயாளரின் அதாவது கந்தகாடு மத்திய நிலையத்தில் பணியாற்றும் ஊழியரின் மற்றுமொரு உறவினர் கோவிட்19 நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதே போன்று ஆகக் கூடுதலான ரீதியில் பிரச்சினைகள் உள்ள ராஜாங்கனையில் தொடர்ந்தும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மற்றுமொரு நபர் கோவிட்19 நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளார். விசேடமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் கோவிட்  19 நோயாளரொருவர் அடையாளம் காணப்பட்டால் நாம் அதனை விசேடமாக குறிப்பிடுவோம். இதற்கமைவாகத்தான், இந்த ராஜாங்கனை நோயாளர் குறித்து நாம் தற்போது உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம்.

இருப்பினும் இதுவரையில் இதுகுறித்து சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பெருமளவில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருப்பதாக அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் கந்தகாடு, சேனபுர மத்திய நிலையத்தில் பணியாற்றியவர்கள் இல்லையாயினும் அந்த மத்திய நிலையங்களிலிருந்து மீண்டும் வீடுகளுக்கு சென்றவர்களை மீண்டும் அழைக்கும் பொழுது அவர்கள் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல. தனிமைப்படுத்துவதற்காக அழைக்கும் பொழுதே இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் இவ்வாறான பணிகள் பகிரங்கதாக இடம்பெறுவதே ஆகும்.

இந்த வகையில் மீண்டும் அழைப்பதில் அதாவது உத்தியோகபூர்வ சீருடையிலான இராணுவம் அல்லது பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் அந்த இடங்களில் மேற்கொள்ளும் பகிரங்கமான பணியாகும்.

மீண்டும் அழைக்கும் பொழுது அழைக்கப்படுபவர்கள் கொவிட் 19 நோயாளர்களாக காணப்படுவார்களாயின் அது தொடர்பாக நாம் உடனடியாக அறிவித்து சமூகத்திற்கு தெளிவுபடுத்துவோம். நாட்டிலும் அந்த பிரதேசத்தில் மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது.

இதே போன்று இன்றைய தினம் ராகம பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரியொருவர், கடந்த 01ஆம் திகதி மற்றொரு வைத்தியசாலையிலிருந்து இந்த வைத்தியசாலையில் இணைந்து கொண்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த மாதம் 21ஆம் திகதி இவர் கந்தகாடு மத்திய நிலையத்தில் ஆலோனை விடயத்திற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்று திரும்பிய பின்னர் ஏதேனும் ஒரு வகையில் சிறிய நோய் நிலைக்குட்பட்டுள்ளார். இருப்பினும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 10ஆம் திகதி வரையில் இந்த தனியார் வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார். இதன் பின்னர் கந்தகாடு மத்திய நிலையத்தில் பணியாற்றியதனால் இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைவாக இந்த வைத்தியசாலையில் 48 பேர் இன்றைய தினம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்பொழுது இந்த வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த PCR பரிசோதனைகளுக்குப் பின்னர் அந்த பரிசோதனையின் அடிப்படையில் இவ்வாறான நோயாளர்கள் பதிவாகவில்லை ஆயின் இந்த வைத்தியசாலை உடனடியாக மீண்டும் திறக்கக்கூடிய நிலைமையுண்டு என தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post