போலீசாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற சாரதி; வேண்டும் என்றே விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற சாரதி!

போலீசாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற சாரதி; வேண்டும் என்றே விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற சாரதி!

மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் பிரிவில், பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டியின் சாரதி ஹங்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த டிப்பர் வண்டி நேற்று (14) முற்பகல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ரன்ன எனும் பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த டிப்பர் வண்டியில் வந்த சாரதி, கொலை அச்சுறுத்தல் விடுத்து சென்று, வண்டியை திருப்பிக்கொண்டு வந்து குறித்த போலீசாரை விபத்து ஏட்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post