போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு ஒன்று மீட்பு!!

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு ஒன்று மீட்பு!!

போதைப் பொருள் வர்த்தகரான அங்கொட லொக்கா என்பவரால் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண CID பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த கழுகு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கழுகு சுமார் 15 கிலோவை சுமக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 2 நபர்களுடன் 1 'ஏயார் ரைவல்' துப்பாக்கியும் 10 ரவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post