பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமிதாப் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், 'எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய எல்லோரும் உடனே கொரோனா சோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.', என்று அமிதாப் தெரிவித்திருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post