இம்முறை முஸ்லிம்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்! -மஹிந்த

இம்முறை முஸ்லிம்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்! -மஹிந்த

இம்முறை பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவார்கள் என நம்புவதாக அதன் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி, தவுலகல பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு காரணங்களினால் கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் எம்மை விட்டு விலகிச் சென்றனர். இம்முறை தேர்தலில் அவர்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்.

எனது அரசாங்கமே முஸ்லிம் மக்களுக்காக அதிகமான சேவைகளை செய்துள்ளது. ஒரு முறை எனது அரசாங்கத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் என 28 முஸ்லிம்கள் பதவி வகித்தனர்.

எனது அரசாங்கம் எப்போதும் இன, மத பேதங்களை அடிப்படையாக கொண்டு செயற்பட்டதில்லை. பௌத்த தர்மத்திற்கு அமைய அப்படியானதை செய்ய முடியாது.

விடுதலைப்புலிகள் அன்று காத்தான்குடியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை சுட்டுக்கொன்ற போதும், முஸ்லிம் மக்கள் வயல்கள், பள்ளிவாசல்களுக்கு செல்ல இராணுவ பாதுகாப்பை வழங்கினோம். தமது கிராமங்களில் வாழ முடியாது சேருவில் பகுதிக்கு வந்த முஸ்லிம் மக்களை பாதுகாப்புடன் அவர்களின் கிராமங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.

எனது அரசாங்கம் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை செய்த அரசாங்கம் என்பதை ஏற்கனவே ஒப்புவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post