இன்றைய இதுவரையிலான கொரோனா நிலவரம்!

இன்றைய இதுவரையிலான கொரோனா நிலவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, 16 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,333 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் கண்காணிக்க்படப்டு வருகின்றனர்.

அத்துடன், 470  பேர் தொடந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தை தற்காலகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post