விமான நிலையம் மீள் திறக்கும் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது!!

விமான நிலையம் மீள் திறக்கும் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது!!

கொரோனா தொற்று காரணமாக சாதாரண பயணிகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் விமான நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலை காரணமாக விமான நிலையம் திறக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என்று வெளிவிவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

நாட்டில் கோவிட் வைரஸ் அதிகரித்து வரும் ஆபத்து மற்றும் இலங்கையுடன் விமான தொடர்பு கொண்ட பல நாடுகளில் இந்த வைரஸ் இன்னும் பரவலாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செயலாளர் கூறினார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post