சுமார் 2 கோடி பெறுமதியான அஞ்சல்; கட்டுநாயக்க விமான நிலையத்தில்!!!

சுமார் 2 கோடி பெறுமதியான அஞ்சல்; கட்டுநாயக்க விமான நிலையத்தில்!!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

'கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்' எனும் சரக்கு சேவைக்கு சொந்தமான கொள்கலனில் அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பெட்டியில் இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சரக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் பொலித்தீன் பைகலில் அடைக்கப்பட்ட சுமார் 5,716 வில்லைகளை கொண்ட பொதி என சுங்கப்பிறிவினர் தெறிவித்துள்ளனர்.

குறித்த இந்த சரக்கு கொழும்பு, புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய நபர் ஒருவரின் பெயரில் பரிசாக அனுப்பப்பட்டிறுந்தமை குறிப்பிடத்தக்கது.

சுங்க அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடி கைது செய்ததை அடுத்து, அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post