
தெஹிவளையில் உள்ள சம்பத் வங்கி கிளைக்கு சென்ற முஸ்லிம் பெண் ஒருவரை தனது பர்தாவை நீக்கி விட்டு உள்ளே வருமாறு வங்கி அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்து குறித்த பெண்ணின் கணவர் உடனடியாக விரைந்து நியாயம் கேட்டதன் பின்னர் முஸ்லிம் பெண் உள்ளே பர்தாவுடன் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த காணொளி நேற்று வைரலாக மாறியதன் பின்னர் சம்பத் வங்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்துள்ளது.