மீண்டும் சமூகத்தில் கொரோனா தொற்றாளர் - கொழும்பில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டன !

இலங்கையில் நேற்றைய தினம் (02) உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,


நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நோயாளி இந்தியாவில் இருந்து இலங்கை வந்த கடல் பாதுகாப்பாளராகும். அவர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பின்னர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்பட்டார். அந்த தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டது.


கொழும்பு, ஜிந்துபிட்டியில் அவரது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த நோயாளி சமூகத்திற்குள் அடையாளம் காணப்பட்டவர் அல்ல எனவும் தனிமைப்படுத்தல் செயற்படுத்தலில் அடையாளம் காணப்பட்ட நோயாளி எனவும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க உறுதி செய்துள்ளார்.

இந்த நிலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் குறித்த பிரிவினால் மேற்கொள்ளப்படடுள்ளது.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post