காய்ச்சலினால் சிறுவன் உயிரிழப்பு - சிலாப வைத்தியசாலை பூட்டு!

காய்ச்சலினால் சிறுவன் உயிரிழப்பு - சிலாப வைத்தியசாலை பூட்டு!

சிலாபம் முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் அறிகுறியான காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பின்னர் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வைத்தியசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post