2021 ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில்!!!

2021 ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில்!!!

ஏ.சி.சி. என அழைக்கப்படும் ஆசிய கிரிக்கெட் நிறுவனம் 2020 க்கான ஆசிய கிண்ணத் தொடரை ஒத்தி வைப்பதாக உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரை 2021 ஜூன் மாதம் இலங்கையில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டு போட்டிகளை நடத்திவிருந்த பாகிஸ்தான், அடுத்த ஆண் தொடரை நடத்தும் இலங்கையுடன் உரிமைகளை பரிமாறிக் கொண்டது.


அதேநேரத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான உரிமையினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனம் கோரியுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளை உள்ளடக்கிய இருபதுக்கு - 20 ஆகியக் கிண்ண போட்டிகளை நடத்த முடியும் என நம்புவதாக ஏ.சி.சி. தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும் பயணக் கட்டுப்பாடுகள், நாடு சார்ந்த தனிமைப்படுத்தபடுத்தல் தேவைகள், அடிப்படை சுகாதார சவால்கள் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடரை நடத்துவதற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post