கத்தாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர் கழுத்தறுத்து கொலை; உடல்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்பு!!

கத்தாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர் கழுத்தறுத்து கொலை; உடல்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்பு!!

கத்தாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இலங்கையர்களின் உடல்கள் இன்று (07) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி, இறந்தவர்கள் 59 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 34 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 01ஆம் திகதி குறித்த இந்த கொலைகள் பதிவாகியுள்ளன, மேலும் கோவிட்19 தொற்று பரவல் காரணமாக உடல்களை இலங்கைக்கு எடுத்து வருவதில் நான்கு மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.

இறந்த தம்பதியினரின் மற்றொருமொறு மகள் இலங்கையில் வசித்து வருகிறார். அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, அவரது குடும்பத்தினர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததாக சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த கொலையை அவர்களின் குடும்பத்தின்படி, கட்டாரில் வசித்து வரும் ஒரு இலங்கையர் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அங்கு இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைகள் குறித்து நியாயமான தீர்ப்பு மற்றும் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post