17 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை! இரத்தினபுரியில் சம்பவம்

17 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை! இரத்தினபுரியில் சம்பவம்

இரத்தினபுரி - பலாங்கொடை, வலகொட பகுதியில் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி புதிய பாடசாலை சீருடை பெறுவதற்காக கடந்த 05ஆம் திகதி மாலை ஒரு ஆடை தைக்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் சமயம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்ததை அடுத்து கடந்த 06ஆம் திகதி பிற்பகல் சிறுமியை குறித்த இளைஞர் வீட்டில் மீட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதித்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி இறந்துவிட்டதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது.

அதன் பின்னர் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post