இன்று 13 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 12 பேர் பூரண குணம்!

இன்று 13 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 12 பேர் பூரண குணம்!

இன்று (08) இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 09 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், ஈரானிலிருந்து வந்த ஒருவர் என நால்வருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2,094 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1,967 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 116 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post