சவூதியில் உயிரிழந்து இலங்கை கொண்டுவரப்பட்ட சடலம் தகனம்; உறவினர்கள் கடும் எதிர்ப்பு!!

சவூதியில் உயிரிழந்து இலங்கை கொண்டுவரப்பட்ட சடலம் தகனம்; உறவினர்கள் கடும் எதிர்ப்பு!!

சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் பொரளை மயானத்தில் நேற்று (08) மாலை தகனம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இறுதிச் சடங்கிற்கு முன்பு உறவினர்கள் உடலைப் பார்க்க சுகாதாரத் துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே உறவினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

சவூதியில் பணி புரிந்து வந்த 44 வயதான கங்காதரன் என்பவரின் சடலமே இப்படி தகனம் செய்யப்பட்டிருந்தது. குறித்த நபர் இதயம் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய குறித்த நபரின் உடலை தகனம் செய்ய சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், பொலிஸ் அதிகாரிகள் நாட்டின் தற்போதைய சட்ட திட்டம் பற்றி விளக்கமளித்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. இதன்போது இறுதிக்கிரிகையை நடத்த உயிரிழந்தவரின் மகனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post