
சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து எண்ணிக்கை 2,730 இலிருந்து 2,731 ஆக அதிகரித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவருடன் நெருங்கிய பழகிய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 656 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மேலும் 16 பேர் சிகிச்சையின் பின் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.064 ஆக பதிவாகியுள்ளது.

