நாட்டில் 16 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில்!!!!

நாட்டில் 16 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில்!!!!

நாட்டில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

"கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில், கொனஹேன, கொடிகமுவ, உடுமுல்ல, இரத்மலானை, ஒருகொடவத்தை, மெத்தேகொடை, கெஸ்பேவ, கொஹுவல, ராவத்தவத்த, கொழும்பு 05,08,09,10,13 மற்றும் 15, கிராண்ட்பாஸ், உஸ்வட்டகெட்டியாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்ட 16 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில் சமூகத்தில் கொரோனா மேலும் பரவுவதனால் நாட்டில் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் கடுமையாக பாதிக்கும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post