சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது!

வெரஹெரயில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து துறையிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட் கிழமை (13) மாத்திரம் 3500 நபர்கள் சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுக் கொள்ள வருகை தந்ததாக திணைக்களம்தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர பல சலுகைகளை வழங்கியிருந்தார்.

  • மார்ச் 16 தொடக்கம் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும்திகதி மேலும் 06 மாதங்களுக்கு நீடீக்கப்பட்டுள்ளது. 
  • ஜூலை 01 தொடக்கம் செப்டெம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின்காலாவதியாகும் திகதி மேலும் 03 மாதங்களுக்கு நீடீக்கப்பட்டுள்ளது. 

காலாவதியாகும் கால எல்லை மீண்டும் நீடிக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


மேலும் ஒரு நாள் சேவைகள் வெரஹெர, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் வழங்க தீர்மானங்கள்எடுக்கப்படவுள்ளதாகவும், மற்றைய சேவைகள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் வழங்கவும் தீர்மானங்கள் எடுக்கப்பவிருப்பதாகஅமைச்சர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை சரிவர பேணுமாறும் அவர் மேலும்வலியுறுத்தினார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post