இன்று வெவ்வேறு இடங்களில் இனம்காணப்பட்ட 10 பேர்; முழு விபரம்!

இன்று வெவ்வேறு இடங்களில் இனம்காணப்பட்ட 10 பேர்; முழு விபரம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகள் இன்று இரவு 7.30 மணியளவில் பதிவாகியுள்ளதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இன்று மாலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நான்கு பேரும், குவைத்தில் இருந்து வந்த ஒருவர் அடங்கலாக 05 பேர் இனம்காணப்பட்டிருந்தனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப்பரவலையடுத்து அங்கு இருந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 05 கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 05 பேரில் இருவர் வெலிக்கந்த பகுதியிலும் ஏனைய மூவரும் ராஜாங்கனை, கபராதுவ, லங்காபுர ஆகிய பகுதிகளில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 473 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post