உலகளவில் இன்று அதிகமான கொரோனா தொற்று பதிவு!

உலகளவில் இன்று அதிகமான கொரோனா தொற்று பதிவு!

கொரோனா பரவல் ஆரம்பித்த நாளில் இருந்து முதல் தடவையாக இன்று (22) ஒரே நாளில் அதிகப்பட்ச நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாத்திரம் உலகின் அனைத்து பகுதிகளிலும் 183,000க்கும் மேலான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமானோர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக அமெரிக்காவில் தொற்றாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மூன்றாவதாக இந்தியாவில் அதிக தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரேசிலில் கொரோனவைரஸினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.

இதன்படி அமெரிக்காவை அடுத்த எண்ணிக்கை உயிரிழப்புக்களை பிரேசில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post