யாழில் வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - இருபாலை மடத்தடி பகுதியில் இன்று (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மரணச்சடங்கில் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.