கருணா அம்மானை கைக்கழுவிய மஹிந்த!!

கருணா அம்மானை கைக்கழுவிய மஹிந்த!!

சமகாலத்தில் சர்ச்சைக்குரிய நபராக மாறியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விளக்கம் அளித்துள்ளது.

கருணா தனது கட்சியின் உறுப்பினரோ அல்லது தங்கள் கட்சிக்கு தொடர்புடையவர் அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொதுத் தேர்தலில் பொதுஜன கட்சியின் சார்பில் கருணா வேட்பாளராகவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருணா வெளியிடும் கருத்திற்கு பொதுஜன பெரமுன கட்சி எந்த பொறுப்பும் இல்லை. அவரின் கருத்திற்கு எமது கட்சி கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவுக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் அவர் ஏதேனும் கருத்து வெளியிட்டால் அது எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை ஒரே நாளில் கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக செயற்படும் கருணா, அவரின் கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post