பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா உறுதி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப் மற்றும் சதாப் கான் ஆகிய மூன்று வீரர்கள் கோவிட் -19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் சோதனைக்கு உட்படுத்திய போதே  இவ்வாறு மூன்று வீரர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இருந்தும் அவர்களுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.


இப்படி கண்டறியப்பட்ட மூவரையும் PCB மருத்துவ குழு உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு அவர்களை அறிவுறுத்தியுள்ளதாக PCB இன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (22)  குறித்த அணியில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளான கிளிஃப் டீக்கன், ஸுஹைப் மாலிக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கராச்சி, லஹோர் மற்றும் பேஷாவாரில் உள்ள மையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவற்றின் பெறுபேறு முடிவுகள் நாளை எதிர்பார்க்கப்படுவதாக PCB தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post