நாளை தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்திருக்கும் தேர்தல் ஒத்திகை!

நாளை தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்திருக்கும் தேர்தல் ஒத்திகை!

rehearsal
எதிர்வரும் பொதுத்தேர்தலை ஒட்டி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தலொன்று நாளை (7) இடம்பெறவுள்ளது.

அம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த ஒத்திகை தேர்தல் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.

மேலும் மூன்று இடங்களிலும் இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறுவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும்போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இனங்காண்பதே இந்த ஒத்திகை தேர்தலின் நோக்கமாகும்.

சமூக இடைவெளியை பேணுதல், முகக்ககவசம் அணிதல் மற்றும் கிருமிநீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் கையாலுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post