கொரோனா மருந்து கண்டுபிடிக்க பிரித்தானிய விஞ்ஞானிகளுடன் இணையும் இலங்கை விஞ்ஞானிகள்!

கொரோனா மருந்து கண்டுபிடிக்க பிரித்தானிய விஞ்ஞானிகளுடன் இணையும் இலங்கை விஞ்ஞானிகள்!

கோவிட் - 19 வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தும் ஊசி மருந்தை கண்டுபிடிக்க பிரித்தானியாவும், இலங்கையும் இணைந்து செயற்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் வாழும் கோவிட் - 19 நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை கண்காணித்து வரும் லண்டன் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கையின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்தும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் 10 மில்லியன் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊசி மருந்து தொடர்பான மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post