கொரோனா நோயாளிக்கு 20 கோடி ரூபா பில் - அமெரிக்காவில்


கொரோனா நோயில் இருந்து மீண்ட நோயாளிக்கு அமெரிக்க மருத்துவமனை ஒன்று ரூ.20.9 கோடி பில் போட்டு அதிர்ச்சிகொடுத்துள்ளது.

மைக்கேல் ஃப்ளோர் என்ற 70 வயது நபர் நார்த்வெஸ்டர்ன் சிட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த மார்ச் 4-ஆம் தேதிஅனுமதிக்கப்பட்டு 62 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் மரணத்தின் பிடிக்கு சென்ற அவர் கொரோனாதொற்றில் இருந்து மீண்டார்.


அவர் குணமடைந்து கடந்த மே 5 அன்று மருத்துவமனை ஊழியர்களின் ஆரவாரத்திற்கு இடையே விடைபெற்றார். இந்நிலையில், அவரது கொரோனா சிகிச்சைக்கு மொத்தம் 1,122,501.04 டாலர் பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த பில் மொத்தம் 181 பக்கங்களுக்கு நீண்டது. அதாவது இலங்கை மதிப்பில் ரூ.20.9 கோடி பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு வழங்கியுள்ள மெடிகேர் க்ளைம் காப்பீட்டுதிட்டம் மூலம் அந்த பில்லுக்கு உண்டான பணத்தை மைக்கேல் ஃப்ளோர் செலுத்தியுள்ளார்.
Previous Post Next Post