இனவாதமின்றி ஐ.தே.க முன்னோக்கி செல்லும்!

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாதமற்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, எந்தேரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதனை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இறுதியில் இரு குழுக்களாக தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டிற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதம் இருந்ததில்லை என தெரிவித்த அவர், தற்போது கட்சிக்கு உள்ளேயும் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post