"The Finance" நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக சுமார் 135,000 பேருக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் எச். ஏ. கருணாரத்ன தெரிவித்தார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் The Finance நிறுவனத்தின் நிதி நடைமுறைகளுக்கான அனுமதி நீக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் மூலம் வைப்பாளர் காப்புறுதி செயற்றிட்டத்தின் கீழ் நட்டஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் The Finance நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக 145,100 பேர் உள்ளதுடன் அவற்றில் 135,000 வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டத்தில் ஒருவருக்கு 6. லட்சம் ரூபா என நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க The Finance நிறுவனத்தின் நட்டஈடு வழங்கும் திட்டத்தில் 93 வீதமானவர்களுக்கு அதனை வழங்கும் நடவடிக்கையை இரு வாரங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.