மீண்டும் ரிஷாடுக்கு அழைப்பாணை!!

மீண்டும் ரிஷாடுக்கு அழைப்பாணை!!

வில்பத்து தேசிய வனப்பகுதி காணி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இரண்டாவது தடவையாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (08) அழைப்பாணை விடுத்துள்ளது.  

வில்பத்து தேசிய வனத்தில் அதிபாதுகாப்பு பகுதிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான காணியை சட்டவிரோதமாக மீள்குடியேற்றத்திற்கும் சட்டபூர்வமற்ற நிர்மாணப் பணிகளுக்கும் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சுற்றாடல் நீதி கேந்திர நிலையம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. 

அதன்படி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post