தர்கா நகர் சிறுவன் விவகாரம் - நீதிமன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யத் தீர்மானம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தர்கா நகர் சிறுவன் விவகாரம் - நீதிமன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யத் தீர்மானம்!!

thariq assault
அளுத்கம, தர்கா நகரில் ;பொலிஸாரால் தாக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியினால் இனரீதியாக நிந்திக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதற்கும், உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.

ஆங்கில நாளேடு ஒன்றிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மே 25ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது ஒரு மாதத்திற்குள் மாதத்திற்குள் நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்த பின்னர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வோம் சிறுவனின் உறவினரான பஸ்லான் சமீம் என்பவர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் கட்டுக்கடங்காத விதத்தில் நடந்துகொண்டான் என்ற கதையை உருவாக்குவதற்கு பொலிஸார் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட விடயத்தை நேரில் பார்த்த அனைவரும் அறிக்கைகளாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர், வீடியோ ஆதாரங்களும் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸார் இந்த விடயத்தை சட்டரீதியாக அணுகவேண்டாம் என குடும்பத்தவர்களிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

-ஜப்னா முஸ்லீம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.