"ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு அரசாங்கத்தை நாம் கோரவில்லை." - அமெரிக்க தூதுவர்

"ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு அரசாங்கத்தை நாம் கோரவில்லை." - அமெரிக்க தூதுவர்

எலைய்னா பி டெப்லிட்ஸ்
கொழும்பில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு தாம் இலங்கை அதிகாரிகளிடம் கோரவில்லை என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள உரிமையிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அந்த நாடு சட்டத்தின் கீழ் சிறுபான்மையினரின் உரிமைகள், சமவுரிமை பாதுகாப்பு சேவையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக கலந்துரையாட எப்போதும் தயாராகவே இருப்பதாக தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு பாரிய கஸ்டநிலை ஏற்பட்ட போது அங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டியே அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் தடுத்ததாக அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஆபிரிக்க அமெரிக்கர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்து இன்று முன்னிலை சோசலிஸ்க்கட்சி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

எனினும் இதனை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தமுற்பட்டபோது முன்னிலை சோசலிக்கட்சியின் குமார் குணரட்னம் உட்பட்ட 53 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்கள் இன்று இரவு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post