சாதாரண தரத்தில் (O/L ) சித்தியடையாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள விசேட சலுகை!


க.பொ.த உயர்தரத்தின் தேசிய தொழில் தகைமை பாடநெறியின் கீழ் தரம் 12 இற்கு மாணவர்களை சேர்ந்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தகுந்த பாடசாலையை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன் மூலம் நன்மையடைய முடியுமென கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பாடநெறியின் கீழ் காணும் 26 பாடநெறிகள் உள்ளடங்கப்பட்டுள்ளன.

1.  குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு
2.  சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
3.  உடற்கல்வி மற்றும் விளையாட்டு
4.  அரங்கற் கலை
5.  நிகழ்ச்சி முகாமை
6.  கலை மற்றும் கைவினை
7.  உள்ளக வடிவமைப்பு
8.  நவநாகரீக வடிவமைப்பு
9.  கிராஃபிக் (Graphic) வடிவமைப்பு
10. சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்
11. தரை அழகு வடிவமைப்பு
12. பிரயோக தோட்டக் கலைக் கற்கை
13. கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி
14. உணவு உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி
15. நீர்வளத் தொழில்நுட்பக் கல்வி
16. பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத்தி தொழில்நுட்பக் கல்வி
17. நிர்மாணக் கல்வி
18. மோட்டார் இயந்திர தொழில்நுட்பக் கல்வி
19. மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கல்வி
20. ஜவுளி மற்றம் ஆடைத் தொழில் நுட்பக் கல்வி
21. உலோகக் கட்டுமான தொழில்நுட்பக் கல்வி
22. அலுமினிய கட்டுமான தொழில்நுட்பக் கல்வி
23. கலை மற்றும் வடிவமைப்பு
24. சுற்றாடல் கல்வி
25. கணணி வன்பொருள் மற்றும் வலையமைப்பு
26. உற்பத்தி

இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post