முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஞானசார தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று ஆஜராகிய ஞானசார தேரர் சாட்சியம் அளித்த போது அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

இதன்படி, துருக்கியில் இருந்து கிடைக்கும் நிதி உதவியின் மூலம் அரேபிய பாடசாலைகள் 30க்கும் அதிகமான கிளைகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மேற்பார்வையில் இந்த பாடசாலைகள் இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post