இன்று 35 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 05 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,889!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 35 பேர் குணமடைந்துள்ளதோடு, மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கடற்படை மற்றும் அவர்களது உறவினர்கள் 922 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்களில்  தற்போது சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 589 ஆகும்.

இன்று (14) பிற்பகல் 4.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக அதிகரித்துள்ளதோடு, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,889 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post