எனது வீட்டை சோதனை செய்த CIDயினர் எனது மடிக்கணிணியை எடுத்துச்சென்றுள்ளனர்! -பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன்
கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற CIDயினர் தான் பயன்படுத்திய மடிக்கணிணியை கைப்பற்றியுள்ளனர் என தற்போது வெளிநாடொன்றில் உள்ள சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்டியன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஆள்கடத்தல் தொடர்பான விசாரணைக்களுடன் எனது பெயரை தொடர்புபடுத்தி பல மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்துள்ளன. இந்த விசாரணை தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எனது சகாக்களையும் என்னுடன் முன்னர் பணிபுரிந்தவர்களையும் விசாரணை செய்துள்ளனர்.

குறிப்பாக எனது இலத்திரனியல் சாதனங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 29ம் திகதியும்,ஜூன் நான்காம் திகதியும் சிஐடி அதிகாரிகள் எனது வீட்டிற்கு சென்று நீதிமன்ற அனுமதியின்றி எனது மடிக்கணிணியை எடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

எனது குடும்பத்தினர் சட்ட உதவியை பெற்றுக்கொண்டதுடன் நீதிமன்ற உத்தரவின்றி அதனை வழங்கமுடியாது என சிஐடியினருக்கு அறிவித்துள்ளனர். ஜூன் 9 ஆம் திகதி ஐந்து CIDயினர் எனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.


எனது படுக்கை அறை, எனது மேஜை, நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர் மேலும் படங்களை எடுத்துள்ளனர்.

எனது கணிணியை கண்டுபிடித்த அவர்கள் அதனை கைப்பற்றியுள்ளனர், எனது மடிக்கணிணியை எடுத்தமைக்கான ஆவணத்தினை வழங்கியுள்ளனர். எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில் முன்னர் CIDயினர் நீதிமன்ற அனுமதியின்றி எனது தொலைபேசி உரையாடல்கள் குறித்த பதிவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அதனை ஆராய்ந்த அவர்கள் பின்னர் விபரங்களை வெளிப்படுத்தினர்.

ஒரு பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் எனது தொலைபேசி உரையாடல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமை குறித்து நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன்.அதன் காரணமாக எனக்கு கடும் ஆபத்து ஏற்படக்கூடும், எனது செய்தி மூலங்கள் மற்றும் தொடர்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நான் எந்த விசாரணை குறித்தும் பொருத்தமான அமைப்புடன் ஒத்துழைக்க தயராக உள்ளேன்.
எனது மடிக்கணிணியை CIDயினர் ஆராய்ந்தாலும், என்மீது குற்றச்சாட்டும் அளவிற்கு அவர்களிற்கு எதுவும் கிடைக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் மடிக்கணிணியின் ஹார்ட்வெயர், தகவல்கள் ஆவணங்களின் நேர்மை தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு உள்நோக்கம் கொண்ட சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

தற்போது CIDயினரிடம் உள்ள எனது மடிக்கணிணி தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்படும் என்பது குறித்து நீதித்துறையினரின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், என தெரிவித்திருந்தார்.

-Thinakkural
Previous Post Next Post