இன்று 55 பேர் பூரண குணம்; மேலும் 13 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,902 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,902 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (15) மாலை 6.30 மணிவரை 13 தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தொற்றுநோய்ப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் மாலைதீவில் இருந்து வந்த 06 பேர், குவைத்தில் இருந்து வந்த 05 பேர் மற்றும் பங்களாதேஸில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்றும் 55 பேர் முற்றாக குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1,342 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 11 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Previous Post Next Post