ரணில், மைத்திரி உள்ளிட்ட மேலும் நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post