சூடுபிடிக்கத் தொடங்கும் கிரிக்கட் ஊழல் : மகிந்தானந்த அலுத்கமகே கிரிக்கட் ஊழல் தொடரில் தகவல் வெளிப்படுத்தாமல் இருப்பது ICC சார்பில் பாரிய குற்றமாகும்!

மூத்த வழக்கறிஞர் நிஷான் பிரேமதிராத்னே தெரிவிக்கையில், ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிக்கட் ஊழல் தொடர்பில் தகவல் கூறாது இருப்பதும் குற்றமாகும், அந்த வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பு கூற நேரிடும்.

"ஐ.சி.சி மற்றும் இலங்கைக் குறியீட்டின் ஊழல் எதிர்ப்புக் குறியீட்டைப் பொறுத்தவரை, எந்தவொரு" பங்கேற்பாளரும் "தேர்வாளர்அல்லது" சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஒரு அணியுடன் இணைந்த வேறு எந்த நபரும் இவ்வாறான ஊழலினை பற்றி ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது கடமை” என்று பிரேமதிராத்னே தெரிவித்தார்.


2011 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அணியின் இறுதி தேர்வுல் கையெழுத்திட்டிருப்பதும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே.

"போட்டி நிர்ணயம் தொடர்பாக எந்தவொரு முறைகேட்டையும் புகாரளிக்கத் தவறியது அல்லது விசாரணையில் ஒத்துழைக்காது இருப்பது இலங்கை மற்றும் ஐ.சி.சி ஆகிய இரண்டிலும் குற்றமாகும்" எனவும் தெரிவித்தார்.

“2019 ஆம் ஆண்டில் இலங்கை விளையாட்டு தொடர்பான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும், இந்தச் சம்பவம் இந்தச் சட்டத்திற்குள் வராது. தற்போது, ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிப்பதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.” எனவும் தெரிவித்தார்.
Previous Post Next Post