இலங்கை தென் மாகாணத்தில் கொரோனா அபாயம்!!! - சிவப்பு எச்சரிக்கை

தென்னிலங்கையின் ஒரு பகுதி கொரோனா ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள பிராந்திய நாடுகளிலிருந்து நோயாளர்கள் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல்கிடைத்துள்ளது .


மீன்பிடி படகுகள் மூலம் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அம்பலங்கொட பகுதிக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக மீனவர்களை தெளிவுப்படுத்து சிவப்பு எச்சரிக்கை அம்பலங்கொடபொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சட்ட ரீதியாக வர முடியாத இந்திய உட்பட நாடுகள் பலவற்றின் கொரோனா தொற்றாளர்கள் பல்வேறு முறைகளை பயன்படுத்திகடலுக்கு செல்லும் இலங்கை மீனவர்களை ஏமாற்றி நாட்டுக்கள் நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post