கத்தார் நாட்டிற்கு திரும்ப இருக்கும் இலங்கையர்களுக்கான தகவல்!

qatar flag
ஜூன் 15 முதல் கத்தார் கோவிட்-19 கட்டுப்பாடுகளை நான்கு கட்டங்களாக படிப்படியாக நீக்குகிறது.

இந்நிலையில் கத்தாருக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து வருகையாளர்களும் கத்தாருக்குள் நுழைந்து 14 நாள் காலத்திற்கு அவர்களின் தனிப்பட்ட செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு (ஹோட்டல் அல்லது மையங்கள்) செல்ல வேண்டும் எனவும் குறப்பிடப்படுகிறது.

நீங்கள் கத்தாருக்கு வெளியே இருந்தபோதும் உங்கள் QID காலாவதியாகிவிட்டால், உங்கள் 14 நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த பின்னர் உங்கள் QID ஐ புதுப்பிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

குறிப்பு: ஆகஸ்ட் 01ஆம் திகதிக்கு பின்னரே இலங்கையர்கள் உள்ளடங்கிய வெளிநாட்டவர்கள் கத்தார் நாட்டினுள் அனுமதிக்கப்படுவர்.
Previous Post Next Post