தேசிய அடையாள அட்டை சேவை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

Identity Card Department
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்களுக்கு அமைய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் விரைவு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கட்டமாக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 250 வாடிக்கையாளர்களுக்கும், காலி அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 50 வாடிக்கையாளர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளித்து பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தமக்கு எளிதான திகதி மற்றும் நேரத்திற்கு முன்பதிவு செய்து தமக்கென ஓர் எண்ணைப் பெற வேண்டும், பின்னர் அதற்கான நேரத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள குறித்த நேரத்தில் மாத்திரம் அலுவலகத்தை நாடவேண்டும்.

காய்ச்சல், சளி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ஒரு நாள் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post