இன்று சுதந்திரச் சதுக்கத்தில் மரணித்தவர் எழுதிய கடிதம்! (முழு விபரம்)

கொழும்பின் சுதந்திர சதுக்கத்திற்கு அருகே இறந்த நபரின் மரணம் தற்கொலை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இறந்தவரின் உடலின் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி அவர் கொள்முதல் செய்ததாக தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இன்று (12) காலை சுதந்திர சதுக்கத்தில் ரோந்து சென்ற போலீசார் சிலரால் இந்த சடலம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் பம்பலபிட்டிய பொலிஸ் பூங்காவில் வசிக்கும் 64 வயதான ராஜீவ் பிரகாஷ் ஜயவீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் நிர்வாக அதிகாரி என போலீசார் தெரிவித்தனர்.


அவர் இறப்பதற்கு முன்பு, தனது சகோதரருக்கு கடிதம் ஒன்றை எழுதி நேற்றிரவு குறுஞ்செய்தி மூலம் அனுப்பியுள்ளார்.

மேலும் அதில் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று (11) மாலை 6.45 மணியளவில் அந்த நபர் தனது வீட்டை விட்டு வெளியேற முன்பு தனது கார் சாவியை வீட்டில் பணிப் பெண்ணிடம் கொடுத்து அதை தனது சகோதரரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் விமான டிக்கெட் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதன் சாவியினை சீல் செய்து அங்கு பணிபுரியும் பெண்ணிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை போலீசார் மேற்கொண்டு வருவதோடு, வீட்டுப் பணிப்பெண் மற்றும் இறந்தவரின் சகோதரரிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இறந்தவர் எழுதிய கடிதம் மற்றும் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post